Tuesday, July 21, 2015

37. இளமை

இளமை 
சுவையை நாக்கு உணரும் முன்பே
              கரைந்து உள்ளே போய் விட்ட இனிப்புப் பண்டம்
மணம் காற்றில் கலப்பதற்கு முன்பே
              வாடி விட்ட வாச மலர்
வினாத்தாளைப் படித்துப் புரிந்து கொள்ளும் முன்பே
              நேரம் முடிந்து  விட்ட பரீட்சை
உள்ளே போய் நுரையீரலைத் தொடு முன்பே
              வெளியேறி விட்ட மூச்சுக் காற்று
மண் ஈரமாகும் முன்பே
              பெய்து ஓய்ந்து விட்ட பருவ மழை
டைட்டில்களிலேயே
              முடிந்து விட்ட திரைப்படம்
லயித்து அனுபவிக்கு முன்பே
              சட்டென்று கலைந்து விட்ட இன்பக் கனவு
பெல்டைக் கட்டிக்கொள்ளும் முன்பே
              முடிந்து விட்ட விமானப் பயணம்
முதல் தேதியிலேயே
              கரைந்து விட்ட மாதச் சம்பளம்
ஆடியிலேயே
              வற்றி விட்ட ஆற்றுப் பெருக்கு
பௌர்ணமிக்கு முன்பே
              தேய்ந்து மறைந்து விட்ட வளர்பிறை நிலவு. 

No comments:

Post a Comment